×

மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் ஒரு மாயை.. 2029 தேர்தலிலும் கூட அமலுக்கு வராது… ப.சிதம்பரம் தாக்கு

காரைக்குடி: மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் 2024 தேர்தலுக்கு முன்னர் மட்டுமல்ல 2029 மக்களவை தேர்தலுக்கு முன்னரும் கூட அமலுக்கு வராது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா சட்டமாகி விட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடும் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம்; மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா சட்டமாகி விட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். 2 தடை கற்களை வேண்டுமென்றே அதில் வைத்துள்ளதாகவும், அதனால் சட்டம் அமலுக்கு வர வாய்ப்பில்லை என்றும் அவர் கறாராக தெரிவித்துள்ளார். தேர்தல் வரும்போது கேஸ், பெட்ரோல் விலை மட்டுமல்ல தக்காளி, வெங்காயம் விலை கூட குறையலாம் என்று ஒன்றிய அரசின் அரசியல் நடவடிக்கைகளை சிதம்பரம் சாடியுள்ளார். ரூ.2,000 நோட்டை அச்சடித்து புழக்கத்தில் விட்டு விட்டு பின்னர் ரத்து செய்வது புத்திசாலிதனமான அரசு செய்யும் வேலை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

The post மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் ஒரு மாயை.. 2029 தேர்தலிலும் கூட அமலுக்கு வராது… ப.சிதம்பரம் தாக்கு appeared first on Dinakaran.

Tags : 2029 election ,p. ,Chidambaram ,Karaikudi ,2024 elections ,2029 elections ,Sidambaram ,Dinakaran ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்