×

சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து.. 2 பேர் மீது வழக்குப்பதிவு; கடைக்கு சீல்!!

சென்னை : சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த பெட்ரோல் விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை ஜோன் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை நேற்று இரவு திடீரென பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. அப்போது மழை பெய்து கொண்டு இருந்ததால் மழைக்காக ஒதுங்கியவர்கள் இடிபாடுகளில் சிக்கினார். தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேற்கூரையின் அடியில் சிக்கி காயம் அடைந்த 20 பேர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

19 பேரில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், 11 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற 5 வயது ஆண் குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது.சம்பவ இடத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தூர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக் குமார், மேலாளர் வினோத் ஆகியோர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் விபத்து நடந்த பெட்ரோல் பங்கிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

The post சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து.. 2 பேர் மீது வழக்குப்பதிவு; கடைக்கு சீல்!! appeared first on Dinakaran.

Tags : Saidapet ,CHENNAI ,Saitappettai ,Dinakaran ,
× RELATED சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு...