×

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவும் : கருத்து கணிப்பில் தகவல்!!

போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 230 சட்டப்பேரவை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜகவும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கக் கூடும் என டைம்ஸ் நவ் – நவ் பாரத் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. அதன்படி தற்போது அங்கு தேர்தல் நடத்தப்பாட்டால் ஆளும் பாஜக 42.80%வாக்குகளுடன் 102 முதல் 110 இடங்களை கைப்பற்றக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 83.80% வாக்குகளுடன் காங்கிரஸ் 118 முதல் 128 கைப்பற்றலாம் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

மற்ற கட்சிகள் 13% வாக்குகளுடன் 2 இடங்கள் வரை வெற்றிபெறக்கூடும். இதனால் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் கமல்நாத் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் ஜோதிர் ஆதித்திய சிந்தியா 22 எம்எல்ஏக்களுடன் கூண்டோடு வெளியேறி பாஜகவில் இணைந்ததால் மீண்டும் அங்கு பாஜக ஆட்சி அமைந்தது.

ஆனால் தற்போது, சிந்தியாவின் கோட்டையாக கருதப்படும் குவாலியர் – சாம்பல் பகுதியில் உள்ள 34 தொகுதிகளில் காங்கிரஸ் 26 முதல் 30 இடங்களில் வெற்றிபெறும் என கருத்து கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. அங்கு பாஜக வெறும் 4 முதல் 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் நிலை உருவாகி உள்ளது. மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 3 ஒன்றிய அமைச்சர்கள், 7 எம்பிக்களையும் பாஜக களம் இறங்கியுள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவும் : கருத்து கணிப்பில் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Madriya Pradesh ,Bopal ,Rajasthan ,Madhra Pradesh ,Rajya Pradesh ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...