×

வாங்கிய பணத்தை திருப்பி தராமல் போலீஸ்காரர் ஏமாற்றுவதாக எஸ்பி அலுவலகம் முன் பெண் தர்ணா

 

மயிலாடுதுறை, செப்.30: போலீஸ்காரர் வாங்கிய பணத்தை திருப்பிதராமல் ஏமாற்றுவதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். கடலூர் சென்ஜோசப்நகரை சேர்ந்தவர் கனிமொழி(37). இவர் உறவினரான சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணியாற்றும் அகஸ்டின் என்பவரிடம் கடந்த 2016ம் ஆண்டுகளில் மற்றும் 2018ம் ஆண்டுகளில் தலா ஒரு லட்சம் வீதம் 2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஒரு சில ஆண்டுகள் கழித்து கனிமொழி தனது பிள்ளைகள் படிப்பு செலவிற்காக பணத்தை திருப்பி கேட்ட போது அகஸ்டின் பணம் கொடுக்காததால் கடந்த ஜுலை மாதம் சீர்காழி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மயிலாடுதுறை எஸ்.பி.அலுவலகத்தில் கனிமொழி மனுஅளித்திருந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது ஒரு லட்சம் பணத்தை திருப்பிதருவதாகவும் மீதி பிறகு தருவதாக அகஸ்டின் கூறியுள்ளார். ஆனால் இது நாள் வரை பணம் கொடுக்காமல் தனக்கு மிரட்டல் விடுப்பதாக கனிமொழி மயிலாடுதுறை எஸ்.பி.அலுவலகத்தில் நேற்று மனுஅளித்துவிட்டு திடீரென்று தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடன் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post வாங்கிய பணத்தை திருப்பி தராமல் போலீஸ்காரர் ஏமாற்றுவதாக எஸ்பி அலுவலகம் முன் பெண் தர்ணா appeared first on Dinakaran.

Tags : SP ,Mayiladuthurai ,
× RELATED போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட...