×

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் குழந்தை உட்பட 5 பேர் படுகாயம்

 

ஜெயங்கொண்டம், செப்.30: ஜெயங்கொண்டம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சின்ன வளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் இலையூர் கிராமத்திற்கு வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்குடி பஸ் ஸ்டாப் அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக எதிரேவந்த பைக் மோதியது.

இதில், இலையூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த சுரேஷ் மற்றும் எதிரே வந்த பைக் ஓட்டி வந்த குவாகம் வெற்றி தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சூர்யா (18) மற்றும் அவரது பைக்கில் வந்த அதே ஊரை சேர்ந்த சிந்தாமணி (22), அவரது ஒரு வயது மகள் அட்சயா, அதே ஊரை சேர்ந்த யசோதை (52) ஆகியோர் படுகாயம் அடைந்து ஐந்து பேரும் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் குழந்தை உட்பட 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Jayangkondam ,Jayangondam ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் கோயில் வளாகத்தில் கட்டுமான பணிகள்