×

கொரடாச்சேரியில் ரூ.77.7 லட்சத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி துவக்கம்

 

நீடாமங்கலம், செப். 30: கொரடாச்சேரியில் ரூ.77.7 லட்சத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டினார்.

இதில், ஒன்றிய துணைத் தலைவர் பாலச்சந்திரன், கால்நடை மருத்துவர் சுவாமிநாதன், கால்நடை மேற்பார்வையாளர் லெனின், உதவி செயற்பொறியாளர் மலர் செல்வி, பேரூராட்சி துணைத் தலைவர் தளபதி, ஒப்பந்தக்காரர் சிவநேசன் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். ரூ.77.5 லட்சத்தில் கட்டப்பட உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடம் வரும் ஜனவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. சுமார் 2,360 சதுர அடி அளவில் கட்டப்படவுள்ள இக்கட்டிடத்தில் ஆபரேஷன் தியேட்டர், புற நோயாளிகள் பிரிவு, கருத்தடை பிரிவு, நிர்வாக பிரிவு ஆகிய அறைகள் தனித்தனியாக அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கொரடாச்சேரியில் ரூ.77.7 லட்சத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Koradacherry ,Needamangalam ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலத்தில் பெட்டிக்கடையில் ₹2,000 திருட்டு