×

ராமநாதபுரத்தில் மீனவர்களுக்கு ரூ.56 லட்சம் நிவாரணத் தொகை

ராமநாதபுரம், செப். 30: ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு பாதிப்படைந்த 14 படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.56.00 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவிதிட்டத்திலிருந்து நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.

எம்எல்ஏக்கள் ராமநாதபுரம் தகாதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகுகள் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் விதம் 10 பயனாளிகளுக்கு ரூ.50.00 லட்சத்திற்கான காசோலையையும், 4 நாட்டுப் படகுகள் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் 4 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் 14 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.56.00 லட்சத்திற்கான நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபிநாத் , ஜெயக்குமார், அப்துல் காதர் ஜெய்லாணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரத்தில் மீனவர்களுக்கு ரூ.56 லட்சம் நிவாரணத் தொகை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Sri Lanka Navy ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...