×

இளையான்குடி பகுதியில் 726 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் எம்எல்ஏ வழங்கினார்

 

இளையான்குடி, செப். 30: இளையான்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி, சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சூராணம் புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்எல்ஏ தமிழரசி கலந்து கொண்டு 726 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தாசில்தார் கோபிநாத், ஆணையாளர் முத்துக்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜுமுதின், ஒன்றிய செயலாளர் செல்வராசன், தமிழ்மாறன், கவுன்சிலர்கள் செல்வி சாத்தையா, மலையரசி ரவிச்சந்திரன், செழியன் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

The post இளையான்குடி பகுதியில் 726 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Ilayayankudi ,Ilaiyankudi ,Ilayayankudi Government Higher Secondary School ,Saaligramam Government Higher Secondary School ,Chatanur Government Higher Secondary School ,Suranam St.… ,Dinakaran ,
× RELATED இளையான்குடி பகுதியில் பருத்தி விலை வீழ்ச்சியால் கவலையில் விவசாயிகள்