×

இசிஎல்ஜிஎஸ் திட்டத்தை 2024 மார்ச் வரை நீட்டிக்க வேண்டும்

 

திருப்பூர்,செப்.30: அவசரகால கடன் இணைப்பு உத்தரவாதத் திட்டத்தை (இசிஎல்ஜிஎஸ்) மார்ச் 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும் என பியோ தலைவர் சக்திவேல், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றுக்கு பிறகு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல், ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை,டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து, தொழில் சம்மந்தமான பிரச்னைகள் தொடர்பாக விவாதித்தார். அப்போது, அவசரகால கடன் இணைப்பு உத்தரவாதத் திட்டத்தை (இசிஎல்ஜிஎஸ்) 2024-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், உற்பத்தியாளர்களுக்கு 5 சதவீதம் வட்டி சமன்படுத்தும் (ஐஇஎஸ்) பலன்களை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவர்களின் இந்த சந்திப்பை நிதியமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

The post இசிஎல்ஜிஎஸ் திட்டத்தை 2024 மார்ச் வரை நீட்டிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்