×

ஊட்டி-தொட்டபெட்டா சாலையில் 200 அடி பள்ளத்தில் பின்னோக்கி சென்று விபத்தில் சிக்கிய கார் திருச்செந்தூர் குடும்பத்தினர் தப்பினர்

ஊட்டி, செப். 30: திருச்செந்தூரிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்றவரின் கார் தொட்டபெட்டா சாலையில் 200 அடி பள்ளத்தில் பின்னோக்கி சென்று விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த சுற்றுலா பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். திருச்செந்தூர் அன்பு நகரை சேர்ந்த ஆடிட்டர் முத்துக்குமார் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.ஊட்டியில், பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நேற்று தொட்டபெட்டா சிகரத்திற்கு காரில் சென்றனர். தொட்டபெட்டா அருகே சென்றபோது ஓரிடத்தில் காரை இடது புறமாக நிறுத்தி கண்ணாடியை சரி செய்துவிட்டு மீண்டும் காரை இயக்க முயன்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பின் புறமாக பள்ளத்தில் இறங்கியது. சுமார் 200 அடி தூரம் பள்ளத்தில் பின்னோக்கி சென்று மரத்தில் மோதி நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.

The post ஊட்டி-தொட்டபெட்டா சாலையில் 200 அடி பள்ளத்தில் பின்னோக்கி சென்று விபத்தில் சிக்கிய கார் திருச்செந்தூர் குடும்பத்தினர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Ooty-Thottapetta road ,Ooty ,Thottapetta road ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் அரசு பள்ளிகளில் மாணவ,...