×

கல்லூரி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கல்

திண்டுக்கல், செப். 30: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கொசவப்பட்டி புனித வளனார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி மோகனப் பிரியா முதல் பரிசு ரூ.5000, திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழக மாணவன் டிக்ஸன் இரண்டாம் பரிசு ரூ.3000, பழநி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி மாணவர் நாக அர்ஜுன் மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் இளங்கோ வழங்கினார்.

The post கல்லூரி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Periyar ,Tamil Development Department ,Dindigul Collector's Office ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் கோட்டைக்குளம் அருகே தொட்டியில் குவிந்த குப்பைகள் அகற்றம்