×

பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீடுகளில் ரெய்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.26 கோடி வேலூர் கோர்ட்டில் ஒப்படைப்பு

வேலூர்: பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி பிரிவு வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஷோபனா(57) மீது எழுந்த லஞ்சபுகார்களின் அடிப்படையில் கடந்த 2ம் தேதி நடந்த விஜிலென்ஸ் சோதனையில் அவரது காரில் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து ரூ.15.85 லட்சம் மற்றும் ஆவணங்கள், வங்கி காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரில் உள்ள ஷோபனாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.06 கோடி ரொக்கம் மற்றும் 11 வங்கிக்கணக்கு புத்தகங்கள், ரூ.28 லட்சத்துக்கான வங்கி வைப்பு நிதி முதலீடுகள், 14 சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.26 கோடி ரொக்கப்பணம், சொத்து ஆவணங்கள், வங்கி நிதி முதலீடுகளுக்கான வருவாய் ஆதாரம் இல்லாததால் ஷோபனா மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை செயற்பொறியாளர் ஷோபனாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.26 கோடி மற்றும் ஆவணங்களை வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் போலீசார் ஒப்படைத்தனர். அதோடு அவரது 11 வங்கி கணக்குகளை முடக்கி வைப்பதற்கான கடிதங்கள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் என 9 மாவட்டங்களில் ஷோபனா பொறுப்புக்கு வந்த பின்னர் நடந்த பணிகளின் விவரங்களுடன், அப்பணிகளை எடுத்து செய்த ஒப்பந்ததாரர்கள் பட்டியலையும் வைத்து தங்கள் விசாரணையை விஜிலென்ஸ் போலீசார் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒப்பந்ததாரர்கள் பட்டியல்,  முடிந்துள்ள பணிகள், நடந்து வரும் பணிகள் தொடர்பான விவரங்களை திரட்டுவதற்கான நடவடிக்கையில் விஜிலென்ஸ் போலீசார் இறங்கியுள்ளனர். …

The post பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீடுகளில் ரெய்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.26 கோடி வேலூர் கோர்ட்டில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : PWD ,Vellore ,Shobana ,Public Works Technical Education Division ,Vellore Division ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...