
சென்னை: தேமுதிக நிர்வாகிகள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரேமலதா பேட்டியின்போது கூறியதாவது: தமிழகத்திற்கு தேவையான காவிரி நீர் பெற அனைவரும் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கர்நாடகா மாநிலத்தில் நேற்று பந்த் நடந்தது. அங்கு இருக்கும் ஒற்றுமை தமிழகத்தில் இல்லை. விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, காவிரி விவகாரம் தொடர்பாக, நடிகர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தினார்.
தற்போது நடிகர் சங்கம் ஏன் போராட்டம் நடத்தவில்லை. அனைத்து கட்சியை கூட்டவும், டெல்லி செல்வதற்கும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக மற்ற கட்சிகளை அழைக்க தயார். எதிர்க்கட்சி தலைவர் கூட முயற்சிக்கலாம். காவிரி விவகாரம் தொடர்பாக, முதல்வரை சந்திப்பது குறித்து எங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வோம். அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ வெளியேறுவது என்பது அவர்கள் முடிவு. இதில், தேமுதிக கருத்து சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணியில் தேமுதிக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்: பிரேமலதா கோரிக்கை appeared first on Dinakaran.