×

கிரிவலப்பாதையில் போலீசார் தீவிர விசாரணை குற்றப்பின்னணி சாமியார்களை பிடிக்க கைரேகை சரிபார்ப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களில் குற்றப் பின்னணி உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் பல்வேறு ஆசிரமங்களில் நூற்றுக்கணக்கான சாமியார்கள் நிரந்தரமாக தங்கியுள்ளனர். அதோடு, பவுர்ணமி கிரிவல நாட்களில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சாமியார்கள் இங்கு வருகின்றனர். அதில், பெரும்பாலானோர் தொடர்ந்து இங்கேயே தங்கிவிடுகின்றனர். பல்வேறு ஆன்மிக அமைப்புகள், ஆசிரமங்கள், தன்னார்வலர்கள் மூலம் சாமியார்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

எனவே, சாமியார்களுக்கு உகந்த இடமாக திருவண்ணாமலை மாறியிருக்கிறது. இந்நிலையில், ஆன்மிக நோக்கத்துடன் இங்கு தங்கியுள்ள சாமியார்களுக்கு மத்தியில், குற்றப்பின்னணி உள்ள சிலரும் ஊடுருவி உள்ளனர். சாமியார்கள் தோற்றத்தில் இருப்பது தங்களுக்கு பாதுகாப்பானது என கருதுகின்றனர். அதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, கிரிவல பக்தர்களிடம் ரகளையில் ஈடுபடும் சாமியார்கள் சிலர் உள்ளனர். எனவே, சாமியார்களின் விபரங்களையும், கைேரகை, முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை முறையாக பதிவு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி தொடர்ந்து போலீசார் கண்காணிக்கின்றனர்.

அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பவுர்ணமிக்காக முகாமிட்ட சாமியார்களின் விபரங்களை கடந்த இரண்டு நாட்களாக சரி பார்த்து விசாரிக்கும் பணியில் திருவண்ணாமலை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், எஸ்ஐ சிவசங்கரன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். சாமியார்களின் அடையாள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, எதற்காக இங்கு தங்கியுள்ளனர், எத்தனை காலமாக உள்ளனர் போன்ற விபரங்கள் கேட்கப்பட்டன. அதோடு, சாமியார்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பின்னணி உள்ளதா என சரிபார்க்கப்பட்டது.

The post கிரிவலப்பாதையில் போலீசார் தீவிர விசாரணை குற்றப்பின்னணி சாமியார்களை பிடிக்க கைரேகை சரிபார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kriwalabathi ,Thiruvannamalai ,Tiruvannamalai… ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் போலீஸ்...