×

காவேரி மருத்துவமனை சார்பில் வடபழனியில் இதய நோய்களுக்கான பிரத்யேக அமைப்பு: காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் தொடக்கம்

சென்னை: உலக இதய தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை சார்பில் வடபழனியில் இதய நோய்களுக்கான பிரத்யேகமான அமைப்பு காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் இதய நோய்களுக்கான பிரத்யேகமான அமைப்பு காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ், வடபழனி காவேரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் ஐயப்பன் பொன்னுசாமி, மருத்துவ மனையின் இதயநோய் மருத்துவ மூத்த ஆலோசகருமான ஜோதிர்மயா தாஷ், மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும் இருதய நோய் நிபுணருமான மகாதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த அமைப்பு இதயம் தொடர்பான நோய்களைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல், மற்றும் தடுப்பதற்கான மையமாகச் செயல்படும். சர்வதேச தரத்தில் மிக உயர்வான மற்றும் விரிவான இதய சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக இது கொண்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் மிகவும் திறமையான இதய நிபுணர்களின் வழிகாட்டுதல் குழுவோடு இயங்கும், நிபுணர்கள் குழுவிடமிருந்து நோயாளிகள் சிறந்த சிகிச்சையைப் பெறுவதை இந்த மையம் உறுதி செய்யும். இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் உள்ள பாதிப்புகளை கண்டறியும் ஒரு பிரத்யோக ஆய்வகம், சிக்கலான மற்றும் அதிக ஆபத்துள்ள சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய அனுபவம் வாய்ந்த இதயநோய் நிபுணர்களைக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: அனைவருக்கும் உயர்தரமான மருத்துவ சேவையை வழங்கவேண்டும் என்ற எங்களது நோக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்தான் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் இதய நோய் அதிகரித்து வருவதால் இதய ஆரோக்கியத்திற்கான முழுமையான சிகிச்சைக்கான அணுகுமுறையை அக்கறையுடன் வழங்குவதை எங்கள் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்களின் மிகச்சிறந்த மையங்களில் ஒன்றான இருதயவியல் மையத்தை வடபழனியில் விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

உலகளவில் நிகழும் உயிரிழப்புகளில் இருதய நோய்களே முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 80சதவீத மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் பெரிய அளவில் தடுக்க முடியும். ஆரம்பகாலத்திலேயே நோர்களை கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, அக்டோபர் 1ம் தேதி வரை இலவச இருதய சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post காவேரி மருத்துவமனை சார்பில் வடபழனியில் இதய நோய்களுக்கான பிரத்யேக அமைப்பு: காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kaveri Hospital ,Vadapalani ,Kaveri Heart Institute ,Chennai ,World Heart Day ,Cauvery Heart ,
× RELATED சொத்து பிரித்து கொடுக்க சொல்லி வயதான...