×

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை:

வாழைக்காய் ஒன்று,
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.

பொடிக்க:

உளுந்தம்பருப்பு,
கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 2,
சீரகம் அரை டீஸ்பூன்.

செய்முறை:

வாழைக்காயை இரண்டாக நறுக்கி வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் இறக்கவும். ஆற வைத்து, தோல் நீக்கி, துருவிக் கொள்ளவும். வெறும் கடாயில் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். மிதமான தீயில் கடாயை வைத்து கடுகு போட்டு பொரித்து, கறிவேப்பிலை சேர்த்து, துருவிய வாழைக்காயை சேர்த்துக் கிளறவும். பொடித்த பொடி, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். எண்ணெய் சேர்க்காததால், அடுப்பை ‘சிம்’மிலேயே வைத்து சமைக்கவும். விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

The post வாழைக்காய் பொடிமாஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்