×

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்.15ம் தேதி வரை வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15ம் தேதி வரை வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் அவரச கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர். காவிரியில் இருந்து விநாடிக்கு 12,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.

தமிழகத்திற்கு நீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அதிகாரிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர். ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைப்படி நீர் திறக்க முடியாது கர்நாடக அரசு தெரிவித்துவிட்டது. புதிய பார்முலாவை பின்பற்றி நீர் பற்றாக்குறை அளவீட்டு பட்டியலை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. தொடர்ந்து, நிலுவை நீரையும் சேர்த்து விநாடிக்கு 12,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அக்டோபரில் திறக்க வேண்டிய 22.14 டி.எம்.சி. நீரை உரிய நேரத்தில் திறக்க வேண்டும். கர்நாடகா புதிதாக வழங்கும் பற்றாக்குறை அளவீட்டு பரிந்துரையை ஏற்கக்கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

மேலும், தமிழகத்தில் பயிர்கள் நீரின்றி கருகுவது குறித்து மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக – கர்நாடக அதிகாரிகள் இடையே வாக்குவாதம் நிலவியது. இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15ம் தேதி வரை வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த 3,000 கனஅடி நீரை கர்நாடகா திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. காவிரியில் 12,500 கனஅடி நீர்திறக்க தமிழ்நாடு வலியுறுத்திய நிலையில் 3,000கன அடி நீர்திறக்க ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.

The post தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அக்.15ம் தேதி வரை வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Kaviri ,Karnataka ,Caviri Management Commission ,Delhi ,Government of Karnataka ,Tamil Nadu ,Kaviri Management Commission ,Dinakaran ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...