×

கயத்தாறு, நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு: தேசிய நெடுஞ்சாலை தரப்பில் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கயத்தாறு, நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலை தரப்பில் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகாராஜன் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கில் மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் 4 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக கன்னியாகுமரி செல்லக்கூடிய பகுதியில் கயத்தாறு, நாங்குநேரி பகுதியிலுள்ள சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 9 சுங்கச்சாவடிகளும், இரண்டு, மூன்று கிலோ மீட்டர் அளவிற்கு பாலங்கள் அமைக்கும் பணி சுமார் 4 ,5வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுவதாகவும். இந்த சாலைகள் முற்றிலும் பராமரிக்கப்படாமல் உள்ளது குறிப்பாக சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடிய சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல், சாலைகளும் முறையாக பராமரிக்கப்படாத சூழலில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமாகும்.

எனவே இந்த இரண்டு சுங்கன்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மகாராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சற்று முன்பாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக சுங்கக்கட்டண விவகாரங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை என்பது கட்டணம் வசூல் செய்வதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கவில்லை சுங்கக்கட்டண வசூலிக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் பராமரிப்புப்பணியை முற்றிலும் செய்வதில்லை என்று தெரிவித்தனர். மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் 14 விபத்துகள் நடந்துள்ள நிகழ்வை சுட்டிகாட்டி நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இத்தகைய சூழலில் எவ்வாறு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்த தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post கயத்தாறு, நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு: தேசிய நெடுஞ்சாலை தரப்பில் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gayatharu ,Nanguneri ,National Highway ,ICourt ,Madurai ,Gayathar, ,Nanguneri National Highway ,
× RELATED அத்திப்பட்டு தேசிய நெடுஞ்சாலை...