×

குளிர்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றம் நோக்கி தினமும் டிராக்டர் பேரணி

புதுடெல்லி: வரும் 29ம் தேதி தொடங்க உள்ள குளிர்கால கூட்டத் தொடரின் போது, தினமும் 500 விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளன. ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் 26ம் தேதியுடன் விவசாயிகள் போராட்டம் ஓராண்டை எட்டுகிறது. இதுதொடர்பாக, போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிஷான் மோர்சா சங்க விவசாயிகள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவு நாளை வரும் 26ம் தேதியன்றோ, அதன் பிறகோ நாடு முழுவதும் பெரிய அளவில் கடைபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். வரும் 29ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது, 500 விவசாயிகள் தினந்தோறும் நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி செல்வார்கள். இப்பேரணி அமைதியான முறையில், முழு கட்டுப்பாடுடன் நடத்தப்படும். இதன் மூலம் ஒன்றிய அரசுக்கு மேலும் அழுத்தம் தர உள்ளோம்’ என கூறப்பட்டுள்ளது….

The post குளிர்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றம் நோக்கி தினமும் டிராக்டர் பேரணி appeared first on Dinakaran.

Tags : Daily tractor rally ,Parliament ,New Delhi ,Dinakaran ,
× RELATED லாயக்கில்லாத எம்பிக்களை அனுப்பி...