×

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கு: 3 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கில் 3 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்ட விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கக்கூறி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்த போது கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுமான பணிகளுக்கு உயர்நீதிமன்ற கிளை ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்தது. மேலும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கனேவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடும் இதுவரை இழப்பீடு வழங்காத 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அப்போதைய ஆட்சியர்களாக இருந்த தஞ்சாவூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் நேரில் வந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கையக படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையக படுத்தியது ஏன்?என கேள்வி எழுப்பினர். நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு தருவது அவர்களுடைய ஜனநாயக உரிமை என கருத்து தெரிவித்தனர். நிலம் வழங்கிய விவசாயிகள் இதுவரை இழப்பீடு வழங்காத இந்த வழக்கில் தற்போதைய கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட 3 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணை வருகின்ற அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது .

The post விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கு: 3 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Igort ,Madurai ,Thanjavur ,District ,Igord ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...