×

சோளிங்கர் அருகே தாளிக்கால் கிராமத்தில் மின் இணைப்பு, அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் 15 குடும்பத்தினர்

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சோளிங்கர் : சோளிங்கர் அருகே தாளிக்கால் கிராமத்தில் மின் இணைப்பு, அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் 15 குடும்பத்தினருக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை எழுந்துள்ளது.சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தில் கனக துர்க்கை அம்மன் கோயில் பகுதியில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இவர்களில் 5 பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை வீடு திட்டம் மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திலும் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன்பேரில் இப்பகுதி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய மின் கம்பங்கள் நடப்பட்டது. ஆனால் மின்கம்பங்களில் மின் கம்பிகள் பொருத்தப்படவில்லை. மின்கம்பங்கள் நடப்பட்டு 10 ஆண்டுகளாகியும் இதுவரை வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் அப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை.

இந்த வீடுகளை சுற்றிலும் மரம் செடி கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டிக்கிடக்கிறது. மேலும், மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதோடு அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சோளிங்கர் அருகே தாளிக்கால் கிராமத்தில் மின் இணைப்பு, அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் 15 குடும்பத்தினர் appeared first on Dinakaran.

Tags : Thathikal ,Solingar ,Tathikal ,Tathika ,Solinger ,Dinakaran ,
× RELATED சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில்...