
சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். காவிரி நீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற்றது. காவிரி நீர் பிரச்சனையில் ஒன்றிய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டினார். நதிநீர் பிரச்சினைக்கு நதிகளை இணைப்பதுதான் ஒரே தீர்வு. நதிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்றார்.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முழு அடைப்பிற்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது. பெங்களூரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் போராடி வருகின்றன. காவிரி விவகாரத்தில் முதலமைச்சரை சந்திப்பது குறித்து தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வோம். நடிகர் சித்தார்த் பங்கேற்ற நிகழ்ச்சியை தடுத்து அவர்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துகின்றனர், தமிழ்நாட்டில் நிலை என்ன?. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம் இவ்வாறு கூறினார்.
The post காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை: பிரேமலதா விஜயகாந்த் appeared first on Dinakaran.