×

முடி திருத்தும் வேலைக்குச் சென்று மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 3 தொழிலாளர்கள்

*மீட்க நெல்லை எஸ்பியிடம் வேண்டுகோள்

நெல்லை : மலேசியாவில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் 3 பேரை மீட்கக்கோரி நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மாவடி ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த மங்களம் நேற்று நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது மகன் எபனேசரை (22) கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மலேசியாவிற்கு முடிதிருத்தும் வேலை செய்ய அங்கு தொழில் செய்யும் ஒருவர் அழைத்துச் சென்றார். அதற்காக அவர் ரூ.50
ஆயிரத்தை பெற்றுக்கொண்டு வேலையில் சேர்த்தார். மேலும் வேலைக்காக எங்கள் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (23), சுரேஷ்(22) ஆகிய இருவரையும் வேலைக்காக அழைத்துச் சென்றார்.
மாதம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் தருவதாக அழைத்துச் சென்ற அவர், மூன்று மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பளமாக அளித்தார்.

அதனால் அவர்களை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்ப நாங்கள் கேட்டதையடுத்து, அவர் ரூ.1 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டார். பணத்தை திருப்பிக் கேட்ட எனது உறவினர் எபனேசருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் எபனேசர், அரவிந்த், சுரேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பி மலேசியாவில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளிகள் சங்கத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். எனவே மலேசியாவில் தவிக்கும் அவர்கள் 3 பேரை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

The post முடி திருத்தும் வேலைக்குச் சென்று மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 3 தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Nellie ,SP ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்