×

தமிழ்நாடு முழுவதும் சந்தைகளில் காய்கறிகள் விலை சரிவு: நாட்டு காய்கறிகள் ஒரு கிலோ ரூ.20க்கு கீழ் விற்பனை

பெரம்பலூர்: தமிழ்நாடு முழுவதும் உள்ள காய்கறி அங்காடிகளிலும், உழவர் சந்தைகளிலும் காய்கறிகள் விலை மிகவும் குறைந்துள்ளது. கடந்த மாதம் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டிருந்த நிலையில் கையில் ரூ.500 இல்லாமல் காய்கறி சந்தைக்கு செல்ல முடியாத நிலையில் நடுத்தர குடும்பத்தினர் தவித்து வந்தனர். தற்போது கிராம புறங்களில் காய்கறி உற்பத்தி அதிகரித்து வருகிறது. உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

இதேபோல பெரிய வெங்காயம், உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. பெரம்பலூரில் உள்ள உழவர் சந்தையில் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை சரிய தொடங்கியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக உள்ளூர் காய்கறிகளான வெண்டை, தக்காளி, முள்ளங்கி, புடலை, கத்தரிக்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் கிலோ ரூ.20-க்கு கீழ் விலை குறைந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலையும் கணிசமாக குறைந்திருக்கிறது. வரும் நாட்களில் காய்கறி விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழ்நாடு முழுவதும் சந்தைகளில் காய்கறிகள் விலை சரிவு: நாட்டு காய்கறிகள் ஒரு கிலோ ரூ.20க்கு கீழ் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Perambalur ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...