×

பக்கத்து மாநிலம் என்பதை கர்நாடகம் மறந்துவிடுகிறது… நட்புறவுடன் இருக்க வேண்டும்… 12,500 கனஅடி காவிரி நீர் திறக்க வலியுறுத்த உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: காவிரியில் வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்த உள்ளோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது; காவிரியில் வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும். மேலும், கர்நாடக அரசு திறந்துவிட்ட 5,000 கனஅடி நீர் போதாது என்றும், கர்நாடகாவிடம் தண்ணீர் இருப்பு உள்ளது. தமிழ்நாட்டுக்கு தர மறுக்கிறது என்று கூறினார். கர்நாடக அணைகளில் தண்ணீர் கொடுக்கக்கூடிய அளவுக்கு போதிய நீர் உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று கர்நாடகா கூறுவது நியாயமல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் ஏற்க மாட்டோம் என்கிறது கர்நாடகம். பக்கத்து மாநிலம் என்பதை கர்நாடகம் மறந்துவிடுகிறது. இரு மாநிலங்களும் நட்புறவுடன் இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற ஆணையையும் மதிக்க மாட்டோம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவையும் மதிக்க மாட்டோம் என்று சொல்வது நியாயமல்ல. பெங்களூருவில் சினிமா நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டது தேவையற்றது. என்று அமைச்சர் கூறினார்.

The post பக்கத்து மாநிலம் என்பதை கர்நாடகம் மறந்துவிடுகிறது… நட்புறவுடன் இருக்க வேண்டும்… 12,500 கனஅடி காவிரி நீர் திறக்க வலியுறுத்த உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Minister ,Thuraymurugan ,Chennai ,Caviri Management Commission ,Kaviri ,
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு