×

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்கான மலர் அலங்கார கண்காட்சி தொடங்கியது; சுற்றுலா பயணிகள் படையெடுப்பு..!!

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கான மலர் அலங்கார கண்காட்சி தொடங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மலர் அலங்கார கண்காட்சியை துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக உதகை அரசு தாவரவியல் பூங்கா இருந்து வருகிறது. இந்த தாவரவியல் பூங்காவை கண்டு மகிழ நாள்தோறும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக முதல் சீசனில் இந்த தாவரவியல் பூங்காவில் நடக்கப்படும் மலர் கண்காட்சியானது மிகவும் புகழ் பெற்றதாகும்.

இந்த மலர் கண்காட்சியை கண்டு மகிழ வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் கூட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கான மலர் அலங்கார கண்காட்சி தொடங்கியது. சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க 30 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் அமைக்கபட்டுள்ளன. மலர் மாடங்களில் 70 வகையான மலர் செடிகள் கொண்ட 21,000 மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

இந்த ஆண்டின் கண்கட்சியின் சிறப்பு அம்சமாக 7500 மலர் தொட்டிகள் மூலம் சந்திராயன் 3 வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லா நீலகிரி என்ற வாசகத்தை ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டும் காட்சிப்படுத்தபட்டுள்ளது. இரண்டாவது சீசனுக்கான மலர் அலங்கார கண்காட்சியில் “GO GREEN” என்ற வாசகம் அடங்கிய அலங்காரமும் இடம்பெற்றிருக்கிறது. மலர் அலங்கார கண்காட்சியை காண காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் குவிந்து வருகின்றனர்.

The post உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்கான மலர் அலங்கார கண்காட்சி தொடங்கியது; சுற்றுலா பயணிகள் படையெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : 2nd Season ,Show ,Uthagai Government Botanical Gardens ,Udagai Government Botanical Garden ,Tourism Minister ,K. Ramachandran Malar… ,Utagai Government Botanical Garden ,
× RELATED ‘லோகி’யாக ஷாருக்கான் நடிக்க வேண்டும் டாம் ஹிடில்ஸ்டன்