×

அறிமுகம் இல்லாத நபர்களின் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்: புதுச்சேரி உயர்க்கல்வித்துறை இயக்குநர் மாணவர்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி: வாட்ஸ்அப்பில் அறிமுகம் இல்லாத நபர்களின் வீடியோ அழைப்பை கல்லூரி மாணவர்கள் ஏற்க வேண்டாம் என புதுச்சேரி உயர்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகரித்து வரும் சைபர் கிரைம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக புதுச்சேரி உயர்கல்வித்துறை இயக்குநர் அமன் சர்மா கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சசெய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதில் கல்லூரி மாணவர்கள் தேவையில்லாத, அவர்களது செல்போன்களுக்கு வரும் அறிமுகம் இல்லாதா வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் தங்களின் புகைப்படங்களை பதிவிடவோ, பகிரவோ வேண்டாம் என்றும் தேவையில்லாத இணையதள முகவரிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு (0413-2276144) கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

The post அறிமுகம் இல்லாத நபர்களின் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்: புதுச்சேரி உயர்க்கல்வித்துறை இயக்குநர் மாணவர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Higher ,Education ,Department of Puducherry ,Puducherry ,WhatsApp ,Higher Education Department of Puducherry ,
× RELATED அண்ணா பல்கலை. தேர்வுக்கட்டண உயர்வு...