×

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்த சுமார் 4000 திருநங்கைகளின் விண்ணப்பங்கள் ஒப்புதலுக்காக காத்திருப்பு!!

சென்னை : சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்த சுமார் 4000 திருநங்கைகளின் விண்ணப்பங்கள் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1.06 கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்த சுமார் 4000 திருநங்கைகளின் விண்ணப்பங்கள் ஒப்புதலுக்காக காத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

21 வயதுக்கு கீழ் உள்ள திருநங்கைகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக திருநங்கைகள் வேதனை தெரிவித்துள்ளனர். விண்ணப்ப படிவத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கான பிரிவு இல்லை என்று இ-சேவை மைய ஊழியர்கள் தெரிவிப்பதாக கூறும் திருநங்கைகள், வாழ்வாதாரத்திற்காக யாசகம் எடுக்கும் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமூக நல துறையின் கீழ் செயல்படும் நல வாரியத்தின் மூலமாக தங்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், காத்திருப்பு பட்டியலில் இருக்கும் தங்களின் ஆவணங்களை விரைந்து பரிசீலித்து உரிமை தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை செயல்படுத்துவதற்கு தமிழக அரசும், தமிழக முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநங்கைகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்த சுமார் 4000 திருநங்கைகளின் விண்ணப்பங்கள் ஒப்புதலுக்காக காத்திருப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...