×

காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு.. தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தம்!

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முழு அடைப்பிற்கு முழு ஆதரவு கிடைத்திருப்பதால் தென்மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. பெங்களூரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவை ஆகிய சேவைகள் வழக்கம்போல இயங்கி வருகிறது. அரசு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் பெங்களூரு மாநகரில் பிஎம்டிசி பேருந்துகள் இயங்கும். அரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும் என்று தெரிகிறது.பந்த் காரணமாக பெங்களூர் மெட்ரோ ரயில் பயணிகள் இன்றி வெறிச்சோடியுள்ளது. அத்திபள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே பெங்களூரு செல்லும் தமிழ்நாடு பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. கோவை – மைசூர் நெடுஞ்சாலையில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள், சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

The post காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு.. தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தம்! appeared first on Dinakaran.

Tags : blockade ,Karnataka ,Cauvery ,Bengaluru ,Tamil Nadu ,Federation of Kannada Organizations ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநிலத்தின் கருத்தை...