×

நோய் பரவும் தன்மை குறையும் முத்துப்பேட்டை வட்டார அரசு பள்ளிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

முத்துப்பேட்டை, செப். 29: முத்துப்பேட்டை வட்டார அரசு பள்ளிகளில் ரூ.1.26 கோடியில் 18 புதிய சத்துணவு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அச்சமின்றி உணவு தயாரிக்க முடியும். பெற்றோர், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். குறிப்பாக, கல்வித்துறையில் அதிகம் கவனம் செலுத்தி பல்வேறு பசிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

கல்வி அறிவு இல்லாத மக்கள் இருக்க கூடாது என நோக்கத்துடன் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தை தரமாக்கி, ஏழை, எளிய மாணவர்கள் வசதிக்காக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது தமிழக மக்களே திரும்பி பார்க்கும் அளவில் உள்ளது.

அந்தவகையில், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் பல்வேறு வசதிகளுடன் பல கோடி மதிப்பீட்டில் பல்வேற கட்டிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மைய கட்டிடங்கள் பழமையாகி சேதமாகி கிடந்தன. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசிடம் அந்தந்த பகுதி பெற்றோர், கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிமுக அரசு கண்டுக்கொள்ள வில்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, பழுதடைந்த பல சத்துணவு மைய கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ரூ.1.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள விளாங்காடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தம்பிக்கோட்டை கீழக்காடு நடுநிலைப்பள்ளி, செங்காங்காடு, ஆரியலூர், கடுவெளி, விளாங்காடு உள்ளிட்ட 18 கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 18 புதிய சத்துணவு மையம் கட்டிடம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் மூலம் அரசு பள்ளியில் அச்சமின்றி சத்துணவு தயாராகும் பணிகள் நடைபெறும். இந்நிலையில் அரசு பள்ளிகளிலும் நடைபெறும் சத்துணவு மையம் கட்டிடம் கட்டுமான பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் வட்டார விவசாய ஆலோசனை குழு தலைவர் திமுக ஒன்றிய செயலாளர் இரா.மனோகரன் நேரில் பார்வையிட்டனர். கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் சத்துணவு மையம் கட்டிடம் கட்டுமான பணியை கண்டு மாணவர்களின் பெற்றோர்களும், கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போதைய கல்வித்துறை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வி அறிவை ஈசியாக புகுத்த தனியார் பள்ளிகளைவிட பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து நடைமுறை படுத்தி வருகிறது. இதனால் கல்வி தரம் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. பள்ளிகளின் கட்டிடங்களை தரத்தை உறுதிபடுத்தும் வகையில் சீரமைப்பு பணிகளும் நடந்து வருகிறது. பெண்கள் பாதுக்காப்பு மீதும் அதிக கவனம் செலுத்தி மாணவிகள் மத்தியில் தன்னம்பிக்கையை உயர்த்தியும், அவர்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தியும் உள்ளது. இன்று 18 அரசு பள்ளிகளில் சத்துணவு மைய கட்டிடம் கட்டி வருவதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

The post நோய் பரவும் தன்மை குறையும் முத்துப்பேட்டை வட்டார அரசு பள்ளிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers Association ,Muthuppet ,Muthupet ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை அருகே வீரன்வயலில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்