×

தஞ்சாவூர் ரயிலடியில் பகத்சிங் 116வது பிறந்த நாள் விழா

தஞ்சாவூர், செப். 29: தஞ்சாவூர் ரயிலடியில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் 116வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். இதில் பகத்சிங் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், குல கல்வி முறையை மீண்டும் கொண்டுவரும், வாரணாசிரம, மனுதர்ம கொள்கைகளை அமல்படுத்த துடிக்கும் ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை முறியடிக்க உறுதி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்பு, மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணைச் செயலாளர் ராவணன், மாநகரச் செயலாளர் எழுத்தாளர் சாம்பான், விசிக மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய உணர்வாளர்கள், ரயில் நிலைய அனைத்து சங்க ஆட்டோ நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post தஞ்சாவூர் ரயிலடியில் பகத்சிங் 116வது பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Bhagat Singh ,Thanjavur train station ,Thanjavur ,Bhagatsingh ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...