×

உலக வெறிநோய் தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை,செப்.29: ரேபிஸ்ட் தடுப்பூசியை கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டர் இறந்த தினமான செப்டம்பர் 28ம் தேதி உலக வெறிநோய் தடுப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 17வது உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 75 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட  நகரில் நடைபெற்று வரும் வெறிநோய் தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய்களை கூட்டி வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த முகாமிற்கு வந்த நாய் ஒன்று தடுப்பூசி போட்டு கொள்ளாமல் மருத்துவர்களை திணறடித்த நிலையில் 20 நிமிடம் போராடிய மருத்துவர்கள் அந்த நாய்க்கு தடுப்பூசி செலுத்தினர்.

The post உலக வெறிநோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : World Rabies Vaccination Camp ,Pudukottai ,World Rabies Prevention Day ,Louis Pasteur ,World Rabies Vaccination ,Camp ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த...