காரைக்கால், செப்.29: முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வீடியோகால் வந்தால் எடுக்க வேண்டாம் என கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி உயர் கல்வித்துறை இயக்குநர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
முன்பின் அறியப்படாத நம்பர்களில் இருந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு வருவதாக துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. அத்தகை வீடியோ அழைப்புகள் மேற்கொள்ளப்படும் போது, அழைப்பவர் யார் என்று தெரியாது.
ஆனால், போன் பேசுபவரின் புகைப்படம் பிடிக்கப்படும். அந்த போட்டோ. பின்னர் ஆபாச வீடியோக்களில் இணைக்கப்பட்டு, அதன் மூலமாக பயமுறுத்தவும், பணத்தைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், குறிப்பாக பொதுமக்களுக்கும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, தெரியாத எண்களில் இருந்து வரும் வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகளை எடுக்க வேண்டாம். எந்தவொரு சமூக வலைதளத்தில் இருந்து வரும் கோரிக்கையை சுயவிவர போட்டோ அல்லது டி.பி அல்லது சுயவிவர தகவலின் அடிப்படையில் ஏற்க வேண்டாம். எந்த லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். எந்த நேரத்திலும் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால், தனிப்பட்ட புகைப்படம் அல்லது நண்பரிடம் கூட பகிர வேண்டாம். தனிப்பட்ட வீடியோவை தெரிந்த நபர் அல்லது கடவுச்சொல் சான்றுகளை மிகவும் சிக்கலானதாக மாற்ற (டெக்ஸ்ட்+ எண்+சின்னங்கள்) வேண்டும். பிறந்த தேதி அல்லது நபரின் பெயரை கடவுச்சொல்லாக பயன்படுத்த வேண்டாம். எல்லா நோக்கங்களுக்காகவும் ஒரே மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்த வேண்டாம். மேலும், கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றி, இரண்டு? மூன்று ஸ்டெப்களை கொண்டு அங்கீகாரத்தை இயக்கவும்.
மேலும், இதுபோன்ற மோசடி வீடியோ அழைப்புகள் வரும்போது அல்லது சைபர் குற்றங்கள் நடந்தால் உடனே பிளாக் செய்து, இதுபற்றி உடனடியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலைய எண் 04132276144 ல் தெரிவிக்க வேண்டும். மேலும், mode@cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் காவல் நிலைய இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வீடியோ கால் வந்தால் எடுக்க வேண்டாம் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.