
திண்டுக்கல், செப். 29: திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போக்குவரத்து கிளை 2 அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் ஜீசஸ் பிராங்கோ தலைமை வகித்தார். மத்திய சங்க தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மத்திய சங்க பொது செயலாளர் ராமநாதன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்களை வழங்க வேண்டும். காலி பணியிடங்கள், வாரிசு வேலைகளை உடனடியாக நிரப்ப வேண்டும். பஸ்களின் பராமரிப்பை மேம்படுத்த தேவையான உதிரி பாகங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மத்திய சங்க துணை பொது செயலாளர் வெங்கிடுசாமி, மத்திய சங்க துணை தலைவர் அனந்தராமன், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து கழக சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.