×

பள்ளி மாணவர்களுக்கு இலவச விழிப்புணர்வு சுற்றுலா: கீழடி, கலைஞர் நூலகத்திற்கு ‘விசிட்’

 

மதுரை, செப். 29: உலக சுற்றுலா தினத்தையொட்டி, பள்ளி மாணவர்கள் ஒரு நாள் இலவச விழிப்புணர்வு சுற்றுலா அடிப்படையில் கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். உலக சுற்றுலா தினத்தையொட்டி மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் இலவச விழிப்புணர்வு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளைச் சேர்ந்த, 55 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நேற்று, அழகர் கோவில் சாலையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து மாணவ, மாணவிகளுடன் புறப்பட்ட பஸ்சை, கலெக்டர் சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் சதீஸ்குமார் மற்றும் உதவி சுற்றுலா அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருமலை நாயக்கர் அரண்மனை, காந்தி மியூசியம், அரசு அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் கீழடி அரசு அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு மாணவ-மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு இலவச விழிப்புணர்வு சுற்றுலா: கீழடி, கலைஞர் நூலகத்திற்கு ‘விசிட்’ appeared first on Dinakaran.

Tags : Underneath ,Madurai ,World Tourism Day ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...