×

தொடர் விடுமுறையொட்டி மீனாட்சியம்மன் கோயிலில் கூட்டம்

மதுரை, செப். 29: தொடர் விடுமுறையால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடக்கிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை மற்றும் மிலாடி நபி உள்ளிட்ட தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி பக்தர்கள் அதிகமாக கோயிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் 4 கோபுர வாசல்களிலும் பக்தர்கள் சோதனைக்கு பின்னர் தரினத்திற்கு செல்ல வரிசையில் காத்திருந்து சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் அம்மன், சுவாமியை நீண்ட வரிசையில் காத்திருந்து நின்று தரிசனம் செய்தனர். சித்திரை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கோயிலை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post தொடர் விடுமுறையொட்டி மீனாட்சியம்மன் கோயிலில் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Meenakshiyamman temple ,Madurai ,Madurai Meenakshiyamman temple ,Meenakshiyamman ,temple ,
× RELATED மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு 5...