
- மீனவர்களின் காங்கிரஸ் பொதுச் சந்திப்பு
- ராமேஸ்வரம்
- ராகுல் காந்தி
- மீனவர்கள் காங்கிரஸ் பொது கூட்டம்
- தின மலர்
ராமேஸ்வரம், செப்.29: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா ஒராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் நாளை நடைபெறவுள்ள மீனவர் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் பேசுகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நாடு முழுவதும் கட்சி தொண்டர்களுடன் 4 ஆயிரம் கிமீ தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் நாளை(செப்.30) அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் எம்பி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக் குழு தலைவர், உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி குறித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ கூறியது: கன்னியாகுமரி துவங்கி காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையின் நிறைவு தினத்தை முன்னிட்டு நாளை பாம்பனில் உள்ள காங்கிரஸ் பவனில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் 70 அடி உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கொடியேற்றும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்று கொடியேற்றும் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் 5 மணிக்கு பாஜக அரசின் மீனவர் மற்றும் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் என்று தெரிவித்தார்.
The post மீனவர் காங்கிரஸ் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.