×

சிக்கண்ணா அரசு கல்லூரி சார்பில் கருமாபளையத்தில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

 

திருப்பூர், செப்.29: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில், தத்தெடுத்த கிராமமான கருமாபளையத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கருமாபாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் பூங்கொடி சக்திவேல், துணைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொரவலூர் ஊராட்சி கிராமிய மக்கள் இயக்க தலைவர் சம்பத்குமார், சேயூர் ரோட்டரி சங்க தலைவர் வெங்கடாசலம் மற்றும் உறுப்பினர்கள், சக்தி வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, காமராஜ், செர்லின், தினேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் காலனியில் உள்ள ஓடையில் 2000க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

The post சிக்கண்ணா அரசு கல்லூரி சார்பில் கருமாபளையத்தில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு appeared first on Dinakaran.

Tags : Karumapalayam ,Chikkanna Government College ,Tirupur ,Tirupur Government Arts College Country Welfare Project Unit ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்