வருசநாடு, செப். 29: கடமலைக்குண்டுவில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகணரங்கள் வழங்கப்பட்டன. கடமலைக்குண்டு ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்புக்கான உடைகள், முக கவசம், கிருமி நாசினி, கையுறைகள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கடமலைக்குண்டு ஊராட்சியில் பணியாற்றும் 29 தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இவர்கள் பணியின் போது கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். விதிகளை மீறும் பணியாளர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக பணிகள் மேற்கொள்வது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சில் ஊராட்சி மன்ற செயலாளர் சின்னசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
The post கடமலைக்குண்டுவில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் appeared first on Dinakaran.