×

வீண் வதந்திகளுக்கு கர்நாடகா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: கர்நாடகா அரசு வீண் வதந்திகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் விட்டுக்கொடுத்து நீரை பகிர்ந்துகொள்வதே நல்லது. ஆனால் மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். பகையை வளர்க்க வேண்டாம், தமிழ்நாடு அண்டை மாநிலம் தான் அண்டை நாடு அல்ல. கர்நாடகா அரசு வீண் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னை வளராமல் இருக்க, அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

The post வீண் வதந்திகளுக்கு கர்நாடகா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,G. K.K. Vasan ,Chennai ,Karnataka government ,Tama ,G.M. K.K. Wasson ,Dinakaran ,
× RELATED தெலங்கானா தேர்தல் கர்நாடகா அரசு மீது...