×

தமிழ்நாட்டில் படித்துவிட்டு தவிக்கும் இளைஞர்கள் 1.50 லட்சம் பேருக்கு வேலை : அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் அனைத்து அரசுத் துறைகளிலும் சேர்த்து 4 லட்சத்துக்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்களால் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டில், 6553 இடைநிலை ஆசிரியர்கள், 3587 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 10,140 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்தும், இதுவரை நியமிக்கப்படவில்லை. தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையிலும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் நடப்பு நிதியாண்டில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.

அடுத்த இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா இரு லட்சம் வீதம் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

The post தமிழ்நாட்டில் படித்துவிட்டு தவிக்கும் இளைஞர்கள் 1.50 லட்சம் பேருக்கு வேலை : அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Bambama ,Annpurani ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...