×

ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் விழா அமர்க்கள கறி விருந்து

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சடையாண்டி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு திருவிழாவையொட்டி அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோயிலிருந்து சுவாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சடையாண்டி கோயிலுக்கு ஊர்வலமாக நேற்று முன்தினம் எடுத்து வரப்பட்டது. அங்கு சுவாமி பெட்டிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன.

பின்னர் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு, அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவில் சடையாண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜை முடிந்ததும் ஆண் பக்தர்களுக்கு காலை வரை விடிய, விடிய அசைவ உணவு பறிமாறப்பட்டது. பெரிய உருண்டைகளாக பிடிக்கப்பட்ட சோறுடன், எலும்பு குழம்பு, மட்டன் வறுவல் போன்றவை பறிமாறப்பட்டன.

The post ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் விழா அமர்க்கள கறி விருந்து appeared first on Dinakaran.

Tags : Temple Festival ,Dindipukal ,Satyandi Temple ,Marudanathi River ,Ayambalayam ,Pathiveeranpatti, Dindiukkal District ,Sesaura Kurry Feast ,
× RELATED வீரபத்திர சுவாமி கோயில் விழா