×

கலால்துறை தடை உத்தரவை மீறி கள்ளத்தனமாக விற்கப்பட்ட 331 லிட்டர் மதுபானம் பறிமுதல்

 

புதுச்சேரி, செப். 29: மிலாது நபியன்று புதுச்சேரியில் கள்ளத்தனமாக விற்கப்பட்ட 331 லிட்டர் மதுபானத்தை கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.85 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மிலாது நபியை முன்னிட்டு நேற்று புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபான கடைகள், சாராயக்கடைகள் மற்றும் கள்ளுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும், கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்க கலால் துறையால் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது. இதில் தாசில்தார் சிலம்பரசன் தலைமையிலான குழுவினர், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகள் மற்றும் அரியாங்குப்பம் கொம்யூனுக்கு உட்பட்ட பகுதிகளிலும், தாசில்தார் விபிஷ் தலைமையிலான குழுவினர் மண்ணாடிப்பட்டு மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும், தாசில்தார் மாசிலாமணி தலைமையிலான குழுவினர் பாகூர் மற்றும் நெட்டப்பாக்கம் கொம்யூனுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினர்.

சோதனையின் அடிப்படையில் நேற்று திருக்கனூர், சோரியாங்குப்பம், மடுகரை, கரையாம்புத்தூர், மணமேடு பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களிடமிருந்து சுமார் 309 லிட்டர் மதுபானம் மற்றும் 22 லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.92,736 ஆகும். கள்ளத்தனமாக மதுபானம் விற்ற நபர்களுக்கு அபராதமாக ரூ.85 ஆயிரம் விதிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

The post கலால்துறை தடை உத்தரவை மீறி கள்ளத்தனமாக விற்கப்பட்ட 331 லிட்டர் மதுபானம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Customs Department ,Puducherry ,Milad Nabi ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு