
- எஸ்.சி.
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தொழில்நுட்ப கல்வித் துறை
- டாக்டர்
- ஆம்பேத்கர்
- எஸ்டி ஊழியர்
- டி. சி மன்மொழி
- பொதுச்செயலர்
- டி மகிமை தாஸ்
- முதல்வர்
- செயின்ட்
- தின மலர்
சென்னை:தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்க தலைவர் டி.மணிமொழி, பொது செயலாளர் டி.மகிமை தாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உடலுறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை முன்பை விட கணிசமாக தற்போது உயர்ந்து கொண்டிருந்தாலும், மாற்று உறுப்பு கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் “உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும்” என சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை, தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி/எஸ்டி பணியாளர் நலச்சங்கம் பெரிதும் வாழ்த்தி வணங்குகிறது. தமிழகத்தில் அனைத்து துறைகளில் உள்ள அரசு ஊழியர்களும், பொதுமக்களும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு: எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் அறிக்கை appeared first on Dinakaran.