- இராஜஸ்தான் சட்டமன்றத்
- அமித் ஷா
- ஜெய்ப்பூர்
- மத்திய அமைச்சர்
- ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்கள்
- ராஜஸ்தான்…
- தின மலர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்ட பேரவை தேர்தலுக்கான உத்திகள் குறித்து கட்சியின் தலைவர்களுடன் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா,ஆலோசனை நடத்தினார். ராஜஸ்தான் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இது குறித்து ஆலோசிக்க, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டா ஆகியோர்சிறப்பு விமானம் மூலம் நேற்றுமுன்தினம் மாலை ஜெய்ப்பூர் வந்தனர். அவர்கள் நேராக விமான நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்றனர்.
அங்கு கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. முதலில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவை சந்தித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அவரை தொடர்ந்து ஒன்றிய அமைச்சரும், கட்சியின் மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரகலாத் ஜோஷி, கட்சியின் மாநில தலைவர் சி.பி.ஜோஷி, ஒன்றிய அமைச்சர்கள் கஜேந்திர சிங், அர்ஜூன் மேக்வால் உள்ளிட்டோருடன் விவாதித்தனர்.
இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ இந்த ஆலோசனை நள்ளிரவு வரை நீடித்தது. மபி பேரவை தேர்தலில் போட்டியிட 3 ஒன்றிய அமைச்சர்கள், 4 எம்பிக்களை வேட்பாளர்களாக பாஜ அறிவித்துள்ளது. அதே போல்,ராஜஸ்தானிலும் 2 ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் சில எம்பிக்களுக்கு சீட் வழங்கக்கூடும்’’ என தெரிவித்தன.
The post ராஜஸ்தான் பேரவை தேர்தல் அமித் ஷா ஆலோசனை appeared first on Dinakaran.
