×

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆண்டாள் கோயிலில் வரவேற்பு

திருவில்லிபுத்தூர், செப்.29: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்றார். ஆண்டுதோறும் செப்.27ம் நாள் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் இவ்வாண்டில் “சுற்றுலாவும் பசுமை முதலீடுகளும்” என்ற கருப்பொருளோடு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கலெக்டர் ஜெயசீலன் மாலை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் உமாதேவி, உதவி சுற்றுலா அலுவலர் அன்பரசன், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆண்டாள் கோயிலில் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Andal Temple ,World Tourism Day ,Thiruvilliputhur ,Tiruvilliputhur ,
× RELATED ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர...