×

பாண்டிபஜார் சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

சென்னை: தி.நகர் பாண்டி பஜார் நாயர் சாலை, வாகன போக்குவரத்து மிகுதியால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்று காலை இந்த சாலையில் திடீரென சுமார் 10 அடி ஆழம், 6 அடி அகலத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த வழியாக சென்றவர்கள் பீதியடைந்தனர். தகவலறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று, பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்தனர்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடந்து வருவதால் பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. இதுபோன்ற பள்ளம் ஏற்கனவே இந்த பகுதியில் ஏற்பட்டதாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

The post பாண்டிபஜார் சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Bandibazar Road ,CHENNAI ,D. Nagar Pandi Bazar Nair Road ,Pandipazar road ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்