×

பெருங்குடியில் குப்பை அகழ்ந்தெடுக்கும் பணி : நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஆய்வு

சென்னை: சென்னை பெருங்குடி, மாதவரம் மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பையை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுந்து நிலத்தை மீட்டெடுக்கும் பணியையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை பிரித்தெடுக்கும் நிலையத்தின் செயல்பாட்டினையும், பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் ஆய்வு செய்தார். மேலும் மாதவரத்தில் செயல்பட்டு வரும் குப்பையிலிருந்து மீத்தேன் எரிவாயு தயாரிக்கும் நிலையத்தையும், கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள டி.டி.ஆர்.ஓ. நிலையத்தையும் ஆய்வு செய்தார்.

The post பெருங்குடியில் குப்பை அகழ்ந்தெடுக்கும் பணி : நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Perungudi ,Municipal Administration ,Chennai ,Chennai Perungudi ,Madhavaram ,Kodungaiyur ,Municipal Administration Department ,Dinakaran ,
× RELATED சென்னை பெருங்குடியில் நேற்று ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது!