
- பெரியார் நகர் அரசு மருத்துவமனை
- பெரம்பூர்
- கலவர்தாஸ்
- சித்தூர்
- ஆந்திரப் பிரதேசம்
- ஊட்டி குன்னூர்…
- பெரியார் நகர் அரசு மருத்துவமனை
பெரம்பூர்: ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் கிளவர்தாஸ் (40). இவர் ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் ஊட்டி குன்னூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டரை வருடங்களுக்கு முன், சைனுசைடிஸ் மற்றும் கண்களில் கண்ணீர் வடியும் தொந்தரவு இருந்தது. இந்த நோயினால், அவரது இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது. ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அந்த சிகிச்சை பலனளிக்காமல் தொடர்ந்து, இவருக்கு கண்களில் தண்ணீர் வந்தது.
இந்நிலையில், அவர், கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு இடது கண்ணில் நீர்ப்பை அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் பேராசிரியர் ஹேமலதா, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் விக்னேஷ் குழுவினர் மற்றும் மயக்கவியல் குழுவினர், கிளவர்தாசுக்கு கடந்த 20ம் தேதி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். இதன் மூலம் நீண்ட கால பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக கூறிய கிளவர்தாஸ் தனக்கு, சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்து, நேற்று வீடு திரும்பினார்.
The post பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ராணுவ வீரருக்கு கண் அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.