×

புற காவல் நிலையங்களில் ஆவடி காவல் ஆணையர் ஆய்வு

பொன்னேரி: ஆவடி காவல் சரக எல்லைக்குட்பட்ட மீஞ்சூர், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் உள்ள புற காவல் நிலையங்களில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். இதில், மீஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தை அவர் பார்வையிட்டார். போக்குவரத்து விபத்து ஏற்படாமல் தடுக்க எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து குறுகிய சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, அத்திப்பட்டு, புழல், செங்குன்றம், சோழவரம் மற்றும் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள புற காவல் நிலையங்களையும் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

அப்போது, குற்ற செயல்களை தடுக்க 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என போலீசருக்கு அறிவுரை வழங்கினார். இதில், மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த ஆய்வின்போது, ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி, சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் ராஜா ராபர்ட், போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி, மீஞ்சூர் ஆய்வாளர்கள் சட்டம் ஒழுங்கு காளிராஜ், குற்றப்பிரிவு சுதாகர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

The post புற காவல் நிலையங்களில் ஆவடி காவல் ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Ponneri ,Aavadi Police ,Meenjoor ,Athipattu ,Athipattu Pudunagar ,Aavadi Police Commissioner ,Dinakaran ,
× RELATED தலைமறைவாக உள்ள 2 குற்றவாளிகளை...